மேற்படி நிகழ்வானது உதவி பிரதேச செயலாளர் திரு கி. இளம் குமுதன் அவர்களின் தலைமையில் மண்முனை பற்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் 26. 03. 2026 பிற்பகல் 2.30 மணிக்கு இடம் பெற்றது.
இந்நிகழ்வில் பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திரு ஆ. சுதர்சன் மற்றும் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கிராம அபிவிருத்தி சங்கம், மாதர் கிராம அபிவிருத்தி சங்கம் சார்பாக தலைவர் செயலாளர் பொருளாளர் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
அத்துடன் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தரில் வரவேற்புரையுடன் ஆரம்பமாகிய இந்நிகழ்வானது உதவிப் பிரதேச செயலாளரின் தலைமை உரையும் பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் அவர்களினால் வேலை திட்டங்கள் ஒப்பந்தங்கள் தொடர்பான விளக்க உரையும் பிரதேச செயலக தொழில்நுட்ப உத்தியோகத்தரினால் திட்டங்கள் தெரிவு செய்யப்படுதல், நடைமுறைப்படுத்தல், திட்டங்கள் தொடர்பான சந்தேகங்கள், திட்டத்தை நடைமுறைப்படுத்தல் போன்ற அனைத்து விதமான சந்தேகங்களுக்கான தெளிவுரை விளக்கமாக தெளிவுபடுத்தப்பட்டது அதனை தொடர்ந்து உதவி பிரதேச செயலாளரின் அனுபவப் பகிர்வுடன் இந்நிகழ்வானது பிற்பகல் 4:30 மணியளவில் இனிதே நிறைவு பெற்றது.
.jpeg)
.jpeg)

.jpeg)


.jpeg)





