மட்டக்களப்பு கல்லடி உப்போடை சிவானந்தா தேசிய பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி-2026


 
















































































































































மட்டக்களப்பு கல்லடி உப்போடை சிவானந்த தேசிய பாடசாலை வருடாந்த   இல்ல விளையாட்டு போட்டி2026.03.19அன்று பாடசாலை மைதானத்தில் இடம் பெற்றது விளையாட்டு போட்டியின் ஆரம்ப நிகழ்வாக  தேசிய கோடி ஏற்றலும் , தேசிய கீதமும் இசைக்கப்பட்டது .

 மட்டக்களப்பு  ராமகிருஷ்ண மிசன் உதவி  பொது முகாமையாளர்
 ஸ்ரீமத் சுவாமி உமா  தீக்ஷானந்தஜீ மகராஜ்   அவர்களின் ஆசியுரையுடன் பாடசாலை அதிபர் எஸ் தயாபரன் தலைமையில்    விளையாட்டு விழா ஆரம்பமானது .

பிரதம அதிதியாக மட்டக்களப்பு கல்வி வலய பணிப்பாளர் தினகரன் ரவி கலந்து சிறப்பித்தார் .
கௌரவ அதிதியாக T.கோகுல குமாரன் மண்முனை வடக்கு  பிரதேச செயலக கல்விப்பணிப்பாளர் ,  சிறப்பு அதிதிகளாக V.லவகுமார் 
ADE-உடற்கல்வி- மட்டக்களப்பு கல்வி வலயம் , ஹரி இல்லத்தலைவர் S. சந்திரகுமார் S.சுமன் உதவி தலைவர் PSA UK BRANCH SHIVANANTHA VIDYALAYA UK-ஆகியோர் பங்கேற்றிருந்தனர் 
அதனைத்தொடர்ந்து ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டு , சத்தியப்பிரமாணம் இடம்பெற்று ,
தொடர்ந்து  மாணவர்களின் அணிநடை மரியாதை இடம்பெற்றது.

 மேலும் உடற்பயிற்சி கண்காட்சியும் நிகழ்வை அலங்கரித்தது.

 இதன்போது வெற்றியீட்டிய , இல்லங்களுக்கும் , மாணவர்களும் பதங்கள், வெற்றிக்கேடயங்கள் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

நடந்து முடிந்த  விளையாட்டு போட்டியில் 300-புள்ளிகளை பெற்று விபுலாந்தா இல்லம் (பச்சை)  முதலாம் இடத்தையும் ,   247-புள்ளிகளை பெற்று இராமகிருஷ்ணா இல்லம் (நீலம்)   இரண்டாம் இடத்தையும் ,    185-புள்ளிகளை பெற்று சிவானந்தா  இல்லம் (மஞ்சள்)  மூன்றாம் இடத்தையும்,      ,111புள்ளிகளை பெற்று விவேகானந்தா  இல்லம்  (சிவப்பு) நான்காம் இடத்தையும் பெற்றது குறிப்பிடத்தக்கது .