( வி.ரி. சகாதேவராஜா)
உலகின்
முதல் தமிழ் பேராசிரியர் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின்
134 ஆவது ஜனன தின விழா இன்று (27) வெள்ளிக்கிழமை காலை அவர் பிறந்த
காரைதீவு மண்ணில், சுவாமி விபுலானந்த ஞாபகார்த்த மணிமண்டபத்தில் சிறப்பாக
நடைபெற்றது.
இந்து சமய கலாசார
அலுவல்கள் திணைக்களமும், சுவாமி விபுலானந்த ஞாபகார்த்த பணி மன்றமும்
இணைந்து பணிமன்ற தலைவரும் பிரதிக் கல்விப் பணிப்பாளருமான சோதீஸ்வரன்
ஸுரநுதன் தலைமையில் விழாவை நடத்தியது .
திருமுன்னிலை நிலை அதிதியாக கண்ணகை அம்மன் ஆலய பிரதம குரு சிவத்திரு கிருஷ்ண பிரியதர்ஷன் குருக்கள் கலந்து கொண்டார்கள்.
கௌரவ
அதிதிகளாக காரைதீவு பிரதேச செயலாளர் ஜி.அருணன், தவிசாளர் சு.பாஸ்கரன்,
உதவி பிரதேச செயலாளர் பே.பிரணவரூபன் ,பிரதி கல்விப் பணிப்பாளர் ஆ.சஞ்சீவன்
உள்ளிட்ட அதிதிகள் கலந்து சிறப்பித்தார்கள் .
குறிப்பாக,
சுவாமி விபுலானந்தரின் "வாழ்க்கை சரித்திர பதாதை" காரை. நண்பர்கள் 86 ஓ
எல் 89 எஎல் அணியினரால் அன்பளிப்பு செய்யப்பட்டு அதிதிகளால் திறந்து
வைக்கப்பட்டது .
அதேபோன்று,
சுவாமிகளின் "வாழ்வியல் சங்கிரகம்" என்ற பதாதை 1969 நண்பர்கள்
ஒன்றியத்தினால் அன்பளிப்பு செய்யப்பட்டு அதிதிகளால் திறந்து வைக்கப்பட்டது .
இசைக்கலைஞர் விபுலமணி இ.கோபாலசிங்கத்தின் "விபுலகானங்கள் " இசைத்தட்டு வெளியிடும் இடம் பெற்றது.
பாராட்டு விழா மற்றும் மாணவர்களின் நிகழ்ச்சிகள் சிறப்பாக இடம் பெற்றன.
பணிமன்ற செயலாளர் கு.ஜெயராஜ் நன்றி கூறினார்.
விழாவில் ஆலய தலைவர்கள் அறநெறி பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.







.jpg)







