இன்று (மார்ச் 13, 2023) அதிகாலை
நிலவரப்படி, ஈரானின் தலைநகர் தெஹ்ரான் மீது இஸ்ரேல் புதிய மற்றும் விரிவான
வான்வழித் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது.
எனினும் இலக்குகள் மற்றும் சேத விபரங்கள் வெளியாகவில்லை.
முன்னதாக, ஈரானின் புதிய உச்ச தலைவராகப்
பொறுப்பேற்றுள்ள முஜ்தபா காமேனி பெயரில் ஈரான் அரச தொலைக்காட்சியில் முதல்
செய்தி வாசிக்கப்பட்டது.
அதில், ஹோர்முஸ் ஜலசந்தியை தொடர்ந்து முடக்கி வைப்போம் என அவர் தெரிவித்திருந்தார்.
இதற்கிடையில், பாரசீக வளைகுடாவில் குறைந்தது மேலும் மூன்று சரக்குக் கப்பல்கள் ஈரான் படைகளால் தாக்கப்பட்டுள்ளன.
இதில் ஒரு தாக்குதலைத் தாங்களே நடத்தியதாக ஈரான் அரச ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
இதில் ஒரு தாக்குதலைத் தாங்களே நடத்தியதாக ஈரான் அரச ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
இந்தநிலையில் போர் தொடங்கிய பெப்ரவரி 28
முதல் இதுவரை ஈரானுக்குள் சுமார் 3.2 மில்லியன் மக்கள் உள்நாட்டிலேயே
இடம்பெயர்ந்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் ஏதிலிகளுக்கான அமைப்பு
தெரிவித்துள்ளது.
இதேவேளை, லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் கடற்கரைப் பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குறைந்தது 8 பேர் கொல்லப்பட்டனர்.
மக்கள் தூக்கத்திலிருந்து பதற்றத்துடன் விழிக்கும் வகையில் பெரும் வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
மக்கள் தூக்கத்திலிருந்து பதற்றத்துடன் விழிக்கும் வகையில் பெரும் வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.