தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தைச சேர்ந்த சுப்பிரமணி, முத்து மணி இணையரின் மகன் மாரி விக்னேஷ் தனியார் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறார்.
இவர் மூன்றாம் வகுப்பு படிக்கும் போது தாத்தா சேகரித்து வைத்திருந்த பழைய நாணயங்களை பார்த்து ஆர்வம் கொண்டு, பணத்தாள்கள் மற்றும் நாணயங்களை சேகரிக்கும் பழக்கத்தில் ஈடுபட்டார்.
நான்கு வருடங்களில் பழங்கால நாணயங்கள் மற்றும் பணத்தாள்களை சேகரித்துள்ளார்.
இதுவரை உலக நாடுகளில் இருந்து 1200 நாணயங்கள் மற்றும் 200 பணத்தாள்களை சேகரித்துள்ளார்.
தங்கம் மற்றும் வெள்ளியில் செய்த பணத்தாள், மூங்கில் நாணயம், ஆற்காடு நவாப் கால நாணயங்கள், எலிசபெத் உருவம் பொறித்த நாணயங்கள், அண்ணா கையெழுத்து இட்ட நாணயம், 12ராசிகளின் உருவம் பொறித்த நாணயங்கள், உலகத்தின் முதல் தங்கம் வெள்ளி பணத்தாள், மடித்து கொடுத்தாலும் இருபுறமும் ஒரே வடிவாக இருக்கும் பிரேசில் நாட்டு பணத்தாள், பிளாஸ்டிக் பணத்தாள் உள்ளிட்ட நாணயங்கள் மற்றும் பணத்தாள்களை சேகரித்து வைத்திருந்தார்.
இந்த நாணயங்கள் மற்றும் பணத்தாள்களை நண்பர்கள் மூலமாகவும் உறவினர்கள் மூலமாகவும் வெளிநாடு வாழ் நண்பர்கள் மூலமாகவும் சேகரித்ததாக தெரிவித்தார்.
பணத்தாள் சேகரிப்பை அங்கீகரிக்கும் விதமாக சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தின் நிறுவனர் முனைவர் நீலமேகம் நிமலன் இவரது சாதனையை உலக சாதனையாக பதிவு செய்து அதற்கான சான்றிதழ்களையும் பழக்கங்களையும் வழங்கி கௌரவப்படுத்தினர். இந்நிகழ்ச்சி திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள பெல் நிறுவன வளாக அரங்கில் நடைபெற்றது.
மேலும் சேகரிக்கப்பட்ட பணத்தாள்கள் நாணயங்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
இதனை பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள், பெற்றோர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.
இந்நிகழ்வில் சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தின் மாநில துணைச் செயலாளர் செல்வராஜ்,
தஞ்சை மாவட்டத் தலைவர் குழந்தைசாமி, திருச்சி மாவட்டச் செயலாளர் தேன்மொழி மற்றும் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.
.jpeg)

.jpeg)


.jpeg)

.jpeg)
.jpeg)

.jpeg)
.jpeg)

.jpeg)
.jpeg)
.jpeg)


.jpeg)
.jpeg)

.jpeg)



.jpeg)
.jpeg)

.jpeg)
.jpeg)

.jpeg)
.jpeg)
.jpeg)

.jpeg)





