அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய கூட்டுப் படைகளின் தாக்குதல் ஈரான் முழுவதும் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,045 ஆக உயர்ந்துள்ளது .

 

 


 அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய கூட்டுப் படைகளின் தாக்குதல் ஐந்தாவது நாளை எட்டியுள்ள நிலையில், ஈரான் முழுவதும் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,045 ஆக உயர்ந்துள்ளதாக ஈரானிய அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

புதன்கிழமை அன்று இஸ்ரேலிய போர் விமானங்கள் ஈரானின் முக்கியப் பகுதிகளைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தின.

இதில், தலைநகர் தெஹ்ரான், புனித நகரமான கோம், மேற்கு ஈரான் பகுதிகள் மற்றும் மத்திய இஸ்ஃபஹான் மாகாணம் ஆகிய இடங்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகின.

இந்தத் தாக்குதல்களில் இராணுவ நிலைகள் மட்டுமன்றி, பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்பு வளாகங்களும் சேதமடைந்துள்ளதாக தஸ்னிம் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் (IRGC) தன்னார்வப் பிரிவான பாசிஜ் (Basij) துணை இராணுவப் படை கட்டிடங்கள் மற்றும் ஈரானின் உள் பாதுகாப்பு கட்டமைப்புடன் தொடர்புடைய அலுவலகங்களையே தாங்கள் இலக்கு வைத்ததாக இஸ்ரேல் தரப்பு தெரிவித்துள்ளது.

இந்தத் தாக்குதல்கள் குறித்து அல் ஜசீரா ஊடகவியலாளர் முகமது வால் தெரிவிக்கையில்,