எருவில் இளைஞர் கழகம் கண்ணகி விளையாட்டு கழகம் உதய நிலா கலைக்கழகம் என்பன இணைந்து(YUK) குழுமமாக நேற்றைய தினம் 2026 ஆம் ஆண்டுக்கான பொங்கல் விழாவினை சிறப்பாக கொண்டாடியது.
பொங்கல் விழாவினை கொண்டாடியது மட்டுமின்றி தமிழர் பாரம்பரியத்தை காக்கின்ற வகையிலும் தமிழர்களினால் பண்டய காலம் தொட்டு மேற்கொள்ளப்படுகின்ற விவசாய ரீதியான செயல்பாடுகளையும் புதிர் எடுத்தல் பொங்குதல் புதிர் கொடுத்தல் போன்ற பாரம்பரிய விடயங்களையும் இன்றைய தினம் மேற்கொண்டிருந்தது. அந்த அடிப்படையில் YUK கழகத்தினர் நேற்றைய தினம் எடுத்து வந்த புதிரினை இன்றைய தினம் நிகழ்விலே பங்கு பற்றிய அனைத்து மக்களுக்கும் வழங்கியதோடு கண்ணகி மகா வித்தியாலயத்திலே தைப்பொங்கல் தொடர்பான எமது பாரம்பரியத்தோடு தொடர்புடைய பல்வேறு நிகழ்வுகளை நடத்தி அந்த நிகழ்வுகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுப்பொதிகளை வழங்கியது மட்டுமல்லாது இன்றைய தினம் கிராமத்திலே உள்ள சமூகமட்ட அமைப்புகள்மற்றும் ஆலயங்கள் சார்பாக 10 பொங்கல் பானைகள் வைக்கப்பட்டு போட்டி அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு பரிசில் வ ழங்கப்பட்து. ஒவ்வொரு நிகழ்வும் எமது தமிழருடைய பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையிலானஒரு பொங்கல் நிகழ்வானது நடாத்தப்பட்டது.
அதேபோன்று இன்றைய தினமும் ஒவ்வொரு நிகழ்வும் எமது பண்டை பாரம்பரியங்களை காப்பாற்றுகின்ற வகையிலே மேற்கொள்ளப்பட்டது. குறித்த நிகழ்விலே மாகாண இளைஞர் சேவைகள் மன்றத்தினுடைய பணிப்பாளர் அவர்களும் மாவட்ட இளைஞர் சேவை அதிகாரியும் இளைஞர் சேவை உத்தியோகஸ்தர்களும் பிரதேச சம்மேளன தலைவர் மற்றும் மண்முனை தென் எருவில் பற்று உப தவிசாளர் உறுப்பினர்கள் ஆலயங்கள் மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் என பல்வேறு அமைப்புகள் சார்ந்த நிர்வாகிகளும் பங்கு பற்றியதோடு பொதுமக்களும் ஆர்வமாக பங்கு பற்றி பொங்கல் விழாவினை சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.











