UK-இருந்து இயங்கி கொண்டிருக்கும் தன்னார்வ தொண்டு நிறுவனமான நம்பிக்கை ஒளி - UK யின் அனுசரணையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கஷ்ட பிரதேச வாகரை மாங்கேணி கொக்குவில் தமிழ் வித்தியாலயத்தில் கல்வி கற்கும் 25-மாணவர்களுக்கு கற்றல் உபகரண பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது .
பாடசாலை அதிபரின் தலைமையில் இடம்பெற்ற குறிப்பிட்ட நிகழ்வுக்கு நம்பிக்கை ஒளி - UK யின் மட்டக்களப்பு அமைப்பாளர் திருமதி.ரஜனி ஜெயப்பிரகாஷ் சிறப்பு விருந்தினராக பங்கேற்றிருந்தார் .
அமைப்பின் அங்கத்தினர்களான திரு.நிவேதி, திருமதி . பிரபா செலவராஜா, திருமதி.வரதராஜன் சுஜா , .திருமதி.ஷோபா விமலநாதன் ஆகியோர் நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர் .
நம்பிக்கை ஒளியின் குறிப்பிட்ட நிகழ்வானது நான்காவது செயல் திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது .







