பொதுமக்களுக்கு புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வை எவ்வாறு வழங்குவது என்ற தலைப்பில், பொதுச் சுகாதார மருத்துவமாதுகளுக்கு (Public Health Midwives) பயிற்சிப்பட்டறையானது
பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி . ஆர்.முரளீஸ்வரன் அவர்களின் வழிகாட்டலில் பிரதி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் கே.மோகனகுமார் அவர்களின் தலைமையில் தொற்றா நோய் தடுப்பு பிரிவின் ஒருங்கிணைப்புடன் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் ஒன்றுகூடல் மண்டபத்தில் 17.02.2026 இன்று இடம் பெற்றது.
இலங்கை புற்று நோய்ச்சங்கம் மட்டக்களப்பு கிளையின் அனுசரணையுடன் இப் பயிற்சிநெறி ஏற்பாடு செய்யப்பட்டது.
இப்பயிற்சி பட்டறையில், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம்,மற்றும் ஆதார வைத்திய சாலைகளில் கடைமை புரியும் பொதுச்சுகாதார மருத்துவ மாதுக்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் வளவாளராக டாக்டர் இக்பால் அவர்கள் கலந்து கொண்டு, பொதுமக்களிடையே புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை எவ்வாறு பயனுள்ள முறையில் எடுத்துச் செல்லலாம் என்பது தொடர்பாக விரிவான பயிற்சிகளை வழங்கியதுடன்
புற்றுநோய் தடுப்பு, ஆரம்பகட்ட கண்டறிதல் மற்றும் பொதுமக்கள் விழிப்புணர்வு ஆகியவற்றை வலுப்படுத்தும் நோக்கில் இத்தகைய பயிற்சி நிகழ்வுகள் முக்கியத்துவம் வாய்ந்தவை என நிகழ்வில் வலியுறுத்தப்பட்டது.














