கிழக்கு மாகாணத்தில் தொழில் முயற்சியாளர்களை மேம்படுத்தும் (Incubation Centre) இங்குபேசன் நிலையத்தினை ஆரம்பித்தல் தொடர்பான கலந்துரையாடல் கிழக்கு பல்கலைக்கழக உப வேந்தர் பேராசிரியர் பி.பிரதீபன் தலைமையில் விஞ்ஞான தொழில் நுட்ப அமைச்சின் செயலாளர் வை.எல்.எம்.நவவீ அவர்களின் பங்கு பற்றுதலுடன் கிழக்கு பல்கலைக்கழக மாநாட்டு மண்டபத்தில் இன்று (15) இடம் பெற்றது.
கிழக்கு பல்கலைக்கழகமும் விஞ்ஞான தொழில் நுட்ப அமைச்சும் இணைந்து கிழக்கு மாகாணத்தில் தொழில்முனைவு, புதுமை மற்றும் நிலையான பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காகன இங்குபேசன் நிலையம் (Incubation Canter) கிழக்கு பல்கலைக்கழக தொழில் நுட்ப பீட வளாகத்தில் எதிர்வரும் (25) திகதி ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதுடன் மட்டக்களப்பு மாவட்டத்தின் உள்ளூர் தொழில் முயற்சியாளர்களின் உற்பத்தி பொருட்களின் கண்காட்சியும் இடம் பெறவுள்ளன.
கிழக்கு மாகாணத்தில் வலுவான பிராந்திய பொருளாதார வளர்ச்சி உயர்த்துவதற்கு பெறுமதி சேர் பொருட்களின் தரம் மற்றும் செயல்திறன் மதிப்பீடு, வணிகத் திட்ட வழிகாட்டுதல், சந்தை இணைப்பு உதவிகள், தயாரிப்பு சோதனைகள், பேக்கேஜிங் வழிகாட்டுதல், லேபிளிங் மற்றும் பிராண்டிங் ஆலோசனை வழங்கள், தொழில்முனைவோருக்கான பயிற்சி திட்டங்கள் போன்ற பல தரப்பட்ட சேவைகள் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந் நிகழ்வில் கிழக்கு பல்கலைக்கழக தொழில் நுட்ப பீடாதிபதி டுலங்க மேனிக்கே குணுபோலகம, கிழக்கு பல்கலைக்கழக பதிவாளர் அமரசிங்கம் பகீரதன், விஞ்ஞான தொழில் நுட்ப அமைச்சின் உத்தியோகத்தர்கள், மட்டக்களப்பு மாவட்ட விதாதா உத்தியோகத்தர் கே.இலக்கணக்குமார், பிரதேச செயலக விதாதா உத்தியோகத்தர் மற்றும் பலர் கொண்டனர்.
இவ் இங்குபேசன் நிலையத்தினால் பெறுமதி சேர் பொருட்களை உற்பத்தி செய்வதற்கான ஆலோசனைகள், தொடக்கநிலை நிறுவனங்கள், இளைஞர் தொழில்முனைவோர் மற்றும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை (SME) மேம்படுத்தும் மையமாக செயற்படவுள்ளதுடன் புதிய தொழில் முயற்சியாளர்களை உருவாக்குவதற்கு பாரிய சேவை வழங்கவுள்ளது.






