கிழக்கு மாகாண மக்கள் சூரியனுக்கு நன்றி செலுத்தி தைப்பொங்கல் திருநாளை கொண்டாடிய உற்சாகத்துடன்
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சகல இந்து ஆலயங்களிலும் பொதுமக்கள் சீரற்ற கால நிலைக்கு மத்தியிலும் தை பூச திருநாளை இன்று
உற்சாகத்துடன்
வழிபாடுகளில் ஈடுபட்டு ஆலயங்களில் இருந்து குன்றாத செல்வம் வேண்டி ஆலய
பிரதம குருக்களிடமிருந்து நெட் கதிர்களை பெற்று தமது வீடுகளில் சென்று
வழிபாடுகளில் ஈடுபடுகின்றனர்
இதேவேளை மட்டக்களப்பு நாவற்குட
நொச்சி முனை கண்காணிப் பிள்ளையார் ஆலயத்திலும் இன்று தைப்பூசத் திருநாளை
முன்னிட்டு விசேட வழிபாடுகள் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ உ. ஜெய கிருஷ்ணா
குருக்கள் தலைமையில் விஷேட வழிபாடுகள் இடம்பெற்றது வழிபாடுகளில் கலந்து
கொண்ட அடியார்களுக்கு ஆலய பிரதம குருக்களால் நெற்கதிர்கள் புதிர் எடுக்கும்
பூஜைகளுக்காக வழங்கி வைக்கப்பட்டது
புதிய ஆண்டில் இந்து மக்கள் தமது வாழ்வில் நற்காரியங்களை தொடங்கும் விசேடதினங்களில் இந்த தைப்பூச தினம் குறிப்பிடத்தக்கதாகும்
முருகப்பெருமானுக்கு உரிய விஷேட தினமாகிய இன்று சகல முருகன் ஆலயங்களிலும் விசேட வழிபாடுகள் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
வரதன்




.jpeg)








