மட்டக்களப்பு மாவட்டம், திருப்பழுகாமத்தில் செயல்பட்டு வரும் இந்து கலா மன்றத்தின் ஏற்பாட்டில், வறுமைக் கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வு 16.02.2024 அன்று பழுகாமம் 01 கிராம அபிவிருத்திச் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வு இந்து கலா மன்றத் தலைவர் இ. திலக்ஷன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. பிரித்தானியாவில் வசித்து வரும் விநாயகமூர்த்தி சுந்தரலிங்கம் அவர்களின் அனுசரணையுடன் இந்நிகழ்ச்சி முன்னெடுக்கப்பட்டது.
இந்த நிகழ்வின் மூலம் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் முப்பது (30) குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் இந்து கலா மன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.


















