பண்டாரவளை, லியங்கஹவெல கல் குவாரி விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்ததுள்ளனர் .

 


பண்டாரவளை, லியங்கஹவெலவில் உள்ள ஒரு கல் குவாரியில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த இரண்டு நபர்களின் சடலங்கள் இலங்கை இராணுவத்தின் உதவியுடன் மீட்கப்பட்டுள்ளன. 

பதுளை அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் கோரிக்கையின் பேரில், 112ஆவது காலாட்படை படையணியின் கீழ் செயல்படும் இராணுவ வீரர்கள் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். 

இந்த மீட்புப் பணியில் சிவில் அதிகாரிகளுக்கும் இராணுவத்தினர் உதவி செய்தனர்.