கிழக்கில் அம்பாறை மாவட்ட அட்டப்பள்ளத்தை அரிக்கும் ஆர்ப்பரிக்கும் ஆழி!

 











கிழக்கில் அம்பாறை மாவட்டத்தில் நிலவும் அசாதாரண இயற்கை சூழல் காரணமாக பல இடங்கள் கடல் பாரிய அரிப்புக்கு உள்ளாகி வருகின்றன.

குறிப்பாக நிந்தவூரை அடுத்துள்ள அட்டப்ள்ளம் எனும் கிராமம் மிகவும் மோசமான கடல் அரிப்புக்கு இலக்காகி வருகின்றது .

கடல் அருகில் இருந்த தென்னந்தோட்டங்களில் சுமார் 100க்கும் அதிகமான தென்னைகளை கடலில் உள்வாங்கியுள்ளது. சுமார் 100 மீட்டர் நிலப் பரப்பை கடலுக்குள் எடுத்துக் கொண்டிருக்கிறது .

அங்குள்ள மக்கள் தங்கள் குடிமனைகளும் கடலுக்குள் சென்று விடுமோ என்று தினம் தினம் அஞ்சி வருகின்றனர்.

 உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 
 ( வி.ரி. சகாதேவராஜா)