கரடியனாறு வைத்திய சாலை சுற்றுவட்டார யானை–மனித மோதலைத் தடுக்கும் மின்சார வேலி திட்டம் முன்னெடுப்பு .
மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள கரடியனாறு பிரதேச வைத்திய சாலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நீண்ட காலமாக இடம்பெற்று வரும் யானை–மனித மோதலைத் தடுக்கும் நோக்கில், மின்சார வேலி அமைக்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்திற்கான காசோலை வழங்கும் நிகழ்வு, பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆர். முரளீஸ்வரன் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க, The Lions Club of Sydney Ceylon Inc அனுசரணையுடன் , Lions Club of Batticaloa New Century MJF , மற்றும் மாவடிவேம்பு வைத்திய சாலை அபிவிருத்திக் குழு ஆகிய அமைப்புகளின் ஒருங்கிணைப்பில் , 16.02.2026 அன்று பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வின் போது, யானை வேலி அமைக்கும் பணிக்கான காசோலை , திட்ட ஒப்பந்தக்காரருக்கு உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டது.
எதிர்காலத்தில் இந்த மின்சார வேலி அமைக்கப்பட்டு பூர்த்தியடைந்த பின்னர், பொதுமக்கள் இரவு நேரங்களிலும் அச்சமின்றி வைத்திய சாலையை அணுகி சிகிச்சை பெறக்கூடிய பாதுகாப்பான சூழ்நிலை உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், வைத்திய சாலை ஊழியர்களும் தங்களது பணிகளை பாதுகாப்பாக மேற்கொள்ள முடியும்.











