அமலபுரம் வீதியையும் கிரான்குளத்தையும் இணைக்கும் பிரதான பாதையின் அவலநிலை .


.



குறிப்பிட்ட வீதியின் வழியாக தினமும்  பாடசாலை மாணவர்கள் உற்பட அன்றாட  தேவை நிமித்தம்   பெருமளவிலான பொதுமக்கள்    பயணம் செய்கின்றனர்.

60குடும்பங்கள் இவ் கிராமத்தில் வசிக்கின்றனர்.

 சேரும் சகதியும் பள்ளமும் படுகுழியுமாக  மிகவும் மோசமான நிலையில் காணப்படும் இவ் கிறவள்  வீதி வழியாக செல்லும் மக்கள்  பாரிய  அசௌகரியங்களை சந்திக்கின்றனர் .
கனமழை பெய்யும் நேரங்களில் வீதியின் இரு  மருங்கிலும் வெள்ளம் தேங்கி  இருக்கும் சந்தர்ப்பங்களில்  மக்கள் பயணம் செய்வதற்கு மிகப்பெரிய சிரமங்களுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது .
எனவே ஆரையம்பதி பிரதேச சபையும் ,போக்கு வரத்துக்கு  பொறுப்பான அதிகாரிகளும் குறிப்பிட்ட  விடயத்தை கவனத்தில் எடுத்து வீதியை புனரமைத்து  சிரமமின்றி   போக்குவரத்து செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பொது மக்கள் கோரிக்கை  விடுக்கின்றனர்