மட்டக்களப்பு மாவட்டத்தில் தித்வா புயலின் பாதிப்பு மற்றும் மட்டக்களப்பு
வாவி தொடர்பான கலந்துரையாடலானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர்
ஜே.எஸ். அருள்ராஜ் அவர்களின் தலைமையில் அனர்த்த முகாமைத்துவ பிரதி
பணிப்பாளர் ஏ.எஸ்.எம்.சியாத் அவர்களின் ஏற்பாட்டில் புதிய மாவட்ட
செயலகத்தில் (10) இடம் பெற்றது.
இதன் போது யப்பான் நாட்டு பல்கலைக்கழ நிபுணர் அடங்கிய குழுவினர் தித்வா புயலின் பாதிப்புகள் தொடர்பாக கேட்டறிந்ததனர்.
மட்டக்களப்பு வாவியின் ஆழம் குறைந்துள்ளமை, களப்பினை தூர்வாராமை, நீரேந்து
பிரதேசங்கள் குறைந்து வருதல் வெள்ளப்பெருக்கிற்கான பிரதான காரணமாக
காணப்படுவது இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.
இதன் போது தித்வா புயலினால் மாவட்டத்தில் ஏற்பட்ட பாதிப்புக்கள் தொடர்பாக
பிரதி பணிப்பாளர் உயர் அதிகாரிகளுக்கு அளிக்கையினூடாக தெளிவூட்டினார்.
இந் நிகழ்வில் கிழக்கு பல்கலைக்கழக பேராசிரியர்கள், மாவட்ட செயலக பிரதி
திட்டமிடல் பணிப்பாளர் வி.நவநீதன், மாநகரசபை ஆணையாளர் என்.தனஞ்செயன்
துறைசார் நிபுணர்கள், உயர் அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்





