தேற்றாத்தீவு கொம்புச்சந்தி பிள்ளையார் ஆலய செய்தி
தேற்றாத்தீவு கொம்புச்சந்தி பிள்ளையார் ஆலயத்தின் தைப்பூசத்தை முன்னிட்டு பாரம்பரிய முறையிலான புதிர் அறுவடை விழா தேற்றாத்தீவு பாலமுருகன் ஆலய பகுதியில் மிக சிறப்பாக இடம் பெற்றது.
பவணியாக நெற்கதிர் அறுவடை இடம் பெறும் இடத்திற்குச் சென்றதுடன், அவ்விடத்தில் பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.
இதன்பின்னர் நெல் அறுவடை இடம்பெற்றதோடு அறுவடை செய்யப்பட்ட நெற்கதிர்களை தலையில் சுமந்து தேற்றாத்தீவு பாலமுருகன் ஆலயத்தில் வணக்கத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து மீண்டும் ஆலயத்துக்கு வருகை தந்தனர்.
அறுவடைசெய்த புதிர் நெற் கதிர்களை பாரம்பரிய முறைப்படி உப்பட்டி அடித்து அரிசியாக்கி அதனை பொங்கல் வைக்கும் நிகழ்வு நடைபெற்றது ஆலயத்தில் தைப்பூசத்தை முன்னிட்டு 1008 சங்க அபிஷேகமும் வசந்த மண்ட பூஜை கட்டும் சுவாமி உள்வீதி திருவிழாவும் நடைபெற்றது

















