ஈரான் முழுவதும் இணையம் முடக்கம்.

 


மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம் காரணமாக ஈரான் தற்போது முழுமையான இணைய முடக்கத்தை (Internet blackout) எதிர்கொண்டுள்ளதாக இணைய கண்காணிப்பு சேவையான 'NetBlocks' தெரிவித்துள்ளது.

ஈரானில் இணையம் துண்டிக்கப்படுவது இது முதல் முறையல்ல.

கடந்த முறை இணையம் முடக்கப்பட்டபோது, ஒரு சிலர் ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX) நிறுவனத்தின் ஸ்டார்லிங்க் (Starlink) செயற்கைக்கோள் இணையம் மற்றும் விபிஎன் (VPN) போன்ற முறைமைகளைப் பயன்படுத்தி இணையத்தைப் பெற்றனர்.

தற்போது இணைய வசதியைப் பெற்றுள்ளவர்களும் அதே போன்ற வழிகளையே மீண்டும் பயன்படுத்த முயற்சிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை ஈரானின் முக்கிய செய்தி இணைய தளங்களுக்குள் சைபர் குழுக்கள் ஊடுறுவியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.