வவுனியா நெடுங்கேணி வெடுக்குநாறி மலையில் சிவராத்திரி தின வழிபாடுகள் சிறப்பாக இடம்பெற்றுள்ளன.
இதன்போது நேற்று (15-02-2026) மதியம் இரண்டு மணியளவில் ஆதி இலிங்கேஸ்வரருக்கு விசேட பூசை அனுட்டானங்கள் இடம்பெற்றன.
சிவராத்திரி தினத்தை முன்னிட்டு காலை முதல் காவல்துறையினர் அந்தப் பகுதியில் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போதும் வழிபாடுகளுக்கு எந்தவிதத் தடைகளும் விதித்திருக்கவில்லை.
அத்தோடு, இரவுநேரப் பூசைகளைச் செய்வதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.





