மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிமனையில் தொடர்ச்சியான கண்காணிப்பு மூலம் தொடர் முன்னேற்றமான(KAIZEN) சுகாதார சேவைகளை வழங்குவது தொடர்பான கலந்துரையாடல் .

 

 








மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிமனையின் அனைத்து ஆதார வைத்தியசாலை தரம் மற்றும் பாதுகாப்பு பிரிவினருக்கான கலந்துரையாடல் நிகழ்வு மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிமனையின் ஒன்று கூடல் மண்டபத்தில் பணிப்பாளர் Dr.R.முரளீஸ்வரன் அவர்களின் பணிப்புரைக்கமைய 19.02.2026  அன்று பிராந்திய ஒன்று கூடல் மண்டபத்தில் இடம்பெற்றது.

ஆதார வைத்தியசாலை தரம் மற்றும் பாதுகாப்பு முகாகாமைத்துவ செயற்பாடுகளை மேம்படுத்தும் உத்திகளும், அதற்கான வழிகாட்டல்களும் ஆலோசனைகளும் கலந்துரையாடப்பட்டது.

மேற்பார்வை செயற்பாடுகளை மேற்கொள்ள வழிகாட்டல் படிவங்களையும்,சரிபார்ப்பு பட்டியல்களை பயன்படுத்தி நோயாளர்களுக்கான  சேவைகளில் தொடர் முன்னேற்றங்களை(KAIZEN) ஏற்படுத்தல் பற்றி தரம் மற்றும் பாதுகாப்பு பிராந்திய பொறுப்பு வைத்திய அதிகாரி Dr.J.சகாய தர்ஷினி அவர்களால் கலந்துரையாடப்பட்டது.

அனைத்து ஆதார வைத்தியசாலைகளின் சில மேற்பார்வை செயற்பாடுகளை விளக்கப் படக்காட்சிகள் மூலம் கலந்துரையாடப்பட்டதுடன் மேலும் மேம்படுத்துவதற்கான உபாயங்களும் எடுத்துரைக்கப்பட்டது.இந்நிகழ்வின் மூலம் ஆதார வைத்தியசாலைகளின் சேவைகளை படிப்படியாக தொடர் முன்னேற்றங்களை உருவாக்குவதன் மூலம் நோயாளிகளுக்கு தரமானதும் பாதுகாப்பானதுமான சேவைகளை வழங்கலாம்.