பெரியநீலாவணை ஆலையடி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் எதிர்வருகின்ற 12.02.2026 ஆம் தேதி வியாழக்கிழமை அன்று காலை 10:49 மணி முதல் 12 15 மணி வரையான சுபவேளையில் சிவலிங்கப்பெருமானுக்கான அபிசேகமும் , நியாசம் செய்கின்ற நிகழ்வும் இடம்பெற இருக்கின்றது. அன்றைய தினம் விசேடமாக லிங்கத்திற்கான பால்காப்பும் சாத்துகின்ற நிகழ்வும் நடைபெறுகிறது. அனைத்து பக்த அடியார்களும் தங்களது பொற்கரங்களால் லிங்கத்திற்கான பாற்காப்பை சாத்தி எல்லாம் வல்ல லிங்கேஸ்வரனின் அருளைப் பெற்றுக் கொள்ளுமாறு அன்பாக அழைக்கப்படுகின்றீர்கள் . கிரியைகள் காலை 7.00மணிக்கு ஆரம்பமாகும். பால் காப்பிற்கான பால் எமது ஆலயத்தில் வழங்கப்படும்.
என். செளவியதாசன்






