மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு,
மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலயத்தில் நடைபெற்ற விசேட சிவ பூஜையில் பிரதமர்
ஹரிணி அமரசூரிய கலந்து கொண்டார்.
மன்னாருக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் இன்று பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டார்.
இதன் ஒரு பகுதியாக பிரதமர் பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார்.







