புற்றுநோய், தற்கொலை தடுப்பு, முதியோர் பராமரிப்பு மற்றும் ஆய்வுத்தலைப்புக்கள் தொடர்பான முதல் பங்குதாரர் கூட்டம்
புற்றுநோய், தற்கொலை தடுப்பு, முதியோர் பராமரிப்பு ஆய்வுத்தலைப்புக்கள் தொடர்பான ஆரம்பகட்ட முதல் பங்குதாரர் கூட்டம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டாக்டர் ஆர் முரளீஸ்வரன் அவர்களின் தலைமையில் தொற்றாநோய்தடுப்பு பிரிவின் ஒருங்கிணைப்பில் நடைபெற்றது.
இந்த முக்கிய கூட்டத்தில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் உதவி செயலாளர் மற்றும் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் நிர்வாக உத்தியோகத்தர் இ
பிராந்திய ஒருங்கிணைந்த அபிவிருத்தி அறக்கட்டளை (FORID) உறுப்பினர்கள், சுகாதாரப் பராமரிப்பு விஞஞான பீட வைத்தியர் டாக்டர் சோபனா,மாவட்ட செயலக உளவள துறை உத்தியோகத்தர்கள் அதிகாரிகளும் கூட்டத்தில் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தின் போது,
புற்றுநோய் தடுப்பு
தற்கொலைத் தடுப்பு
முதியோர் பராமரிப்பு (Elders Care)
சுகாதார ஆய்வுகள் (Research Topics)
ஆகிய தலைப்புகள் விரிவாக ஆராயப்பட்டன.
இத்துறைகளில் என்னென்ன ஆய்வுகளை மேற்கொள்ளலாம், பல்கலைக்கழகங்களுடன் இணைந்து எவ்வாறு செயல்படலாம், அதிக மக்கள் தொகையை இலக்காகக் கொண்டு மருத்தவ பரசோதனை திட்டங்களை எவ்வாறு முன்னெடுக்கலாம், புற்றுநோய் மற்றும் மனநல விழிப்புனர்வு நிகழ்ச்சிகளை எவ்வாறு நடத்தலாம் என்பன குறித்து விரிவான கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.
மேலும், பல்கலைக்கழகங்கள், பயிற்சி கல்லூரிகள், தொழிற்சாலைகள் மற்றும் அதிக தொழிலாளர்கள் பணியாற்றும் இடங்களில் பெரிய அளவிலான புற்றுநோய் விழிப்புனர்வு , மருத்துவ பரிசோதனை நிகழ்ச்சிகள், கண்காட்சி , புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.






















