(ஆரையம்பதி செய்தியாளர்)
செந்தில்குமார் தலைமையில் ஆரையம்பதியில் இனிப்புப் பங்கீடு, பட்டாசு வெடிப்பு!
இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன், பாராளுமன்றக் குழு தலைவராகத் தெரிவு செய்யப்பட்டதை முன்னிட்டு, அவருக்கு வாழ்த்துத் தெரிவிக்கும் வகையில் மண்முனை பிரதேச சபை தவிசாளர் கே. செந்தில்குமார் தலைமையில் ஆரையம்பதி பகுதி இலங்கை தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் இணைந்து சிறப்பு நிகழ்வொன்றை இன்று (05) கிரான்குளம் பகுதியில் ஏற்பாடு செய்திருந்தனர்.
இதன்போது பொதுமக்களுக்கு இனிப்புப் பண்டங்கள் வழங்கப்பட்டதுடன், பட்டாசுகள் வெடித்து மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர்.
இந்த நிகழ்வின் மூலம், இரா. சாணக்கியன் அவர்களின் புதிய பொறுப்பிற்கான பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் மண்முனை பிரதேச சபை தவிசாளர் கே. செந்தில்குமார் தெரிவித்ததுடன், இலங்கை தமிழரசுக் கட்சியின் அரசியல் பயணத்திற்கு ஒற்றுமையும் ஆதரவும் தொடர்ந்தும் வழங்கப்படும் என்பதையும் கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் வலியுறுத்தினர்.
இந்நிகழ்வு, கட்சியினரின் ஒருமைப்பாட்டையும் உற்சாகத்தையும் வெளிப்படுத்தும் முக்கிய தருணமாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

.jpeg)

.jpeg)
.jpeg)

.jpeg)

.jpeg)




