மன்னாரில் பாடல் பெற்ற தளமான திருக்கேதீஸ்வர ஆலயத்தில் மகா சிவராத்திரி நிகழ்வானது இன்று ஞாயிற்றுக்கிழமை (15) சிறப்பாக இடம்பெற்றது.
இலங்கையின் வடக்கு, கிழக்கு மற்றும் தென் பகுதிகளில் இருந்து இலட்சக்கணக்கான மக்கள் வருகைதந்ததோடு வெளிநாடுகளில் இருந்தும் விசேடமாக பக்தர்கள் வருகை தந்திருந்தனர்.
காலை தொடக்கம் பல்வேறு பட்ட சமய நிகழ்வுகள் பூஜைகள் இடம்பெற்றதுடன் பல்வேறு சொற்பொழிவுகள் இடம் பெற்றது.
மேலும் பலத்த பாதகாப்புகளுக்கு மத்தியில் சிவராத்திரி நிகழ்வுகள் இடம் பெற்று வருவதோடு,நாட்டின் பல பாகங்களில் இருந்தும் திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு விசேட போக்குவரத்து சேவைகள் இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





