கல்முனை
வலயத்துக்குட்பட்ட காரைதீவு கண்ணகி இந்து வித்தியாலய முதலாந்தர
மாணவர்களுக்கு அவுஸ்திரேலியா காரைதீவு மக்கள் ஒன்றியத்தினர் ( ஒஸ்கார் -
Auskar) ஒரு தொகுதி கற்றல் உபகரணங்களை வியாழக்கிழமை வழங்கி வைத்தனர்.
பாடசாலை
அதிபர் சீன.திருக்குமார் தலைமையில் நடைபெற்ற வித்தியாரம்பவிழாவில்,
அவுஸ்திரேலியா காரைதீவு ஒன்றிய (ஒஸ்கார் ) அமைப்பின் தலைவர் கந்தசாமி
பத்மநாதன் (ராஜன்) தலைமைத்துவத்தில், ஒஸ்கார் உப செயலாளர்
ஆர்.பிரதீபராஜ்ஜின் ஒருங்கிணைப்பில், ஒஸ்கார் போசகர் பொறியியலாளர்
வேலுப்பிள்ளை சிவசுப்பிரமணியம் கற்றல் உபகரணங்களை வழங்க, அனுசரணை
வழங்கியிருந்தார்.
விழாவில்
பிரதம அதிதியாக, ஒஸ்கார் பிரதிநிதியும் ஓய்வு நிலை உதவி கல்விப்
பணிப்பாளருமான வித்தகர் விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா கலந்து சிறப்பித்தார்.
மேலும் ஒஸ்கார் சார்பில் ஆசிரியர்களான ஆர்.ரத்னகுமார், க.லோகநாதன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
நிகழ்வில்,
அனுசரணை வழங்கிய ஒஸ்கார் போசகர் பொறியியலாளர் வேலுப்பிள்ளை
சிவசுப்பிரமணியத்தின் மகளான திருமதி காயத்ரி மோகனன் அண்மையில்
இறைபதமடைந்ததையொட்டி இருநிமிட நேரம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டமை
குறிப்பிடத்தக்கது.
( வேதசகா )
















