காட்டு யானைகயின் தாக்குதலுக்கு உள்ளாகி பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்- மட்டக்களப்பு வாழைச்சேனை பகுதியில் சம்பவம்.

 


மட்டக்களப்பு - வாழைச்சேனை பகுதியில் காட்டு யானைகள் ஊடுருவி மேற்கொண்ட தாக்குதலில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்த மூவரும் வாழைச்சேனை ஆதார மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவனை பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.

யானைத் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த பெண்ணின் உடலமும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இன்று காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.