மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷனில் இடம்பெற்ற மகா சிவராத்திரி பூசை .

 

 








 





மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷனில் இடம்பெற்ற மகா சிவராத்திரி பூசை வழிபாடுகளில் திருக்கைலாயத்திலிருந்து கொண்டுவரப்பட்ட சிவலிங்கத்திற்கு அபிஷேகம்!!
மகா சிவராத்திரியை முன்னிட்டு மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷனில் நான்கு ஜாம பூசைகள் மிகவும் பக்தி பூர்வமாக இடம்பெறவுள்ளது.
ராமகிருஷ்ண மிஷன் மட்டக்களப்பு கிளையின் மேலாளர் சுவாமி நீலமாதவானந்தா ஜீ மஹராஜ் தலைமையில் முதல் ஜாம பூசைகள் பி.ப 8.00 மணியளவில் பஜனை வழிபாட்டுடன் இடம்பெற்றது.
அதனைத் தொடர்ந்து முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரினால் இந்தியாவின் திருக்கைலாயத்திலிருந்து கொண்டுவரப்பட்ட சிவலிங்கத்திற்கு அபிஷேகம் இடம்பெற்றது.
இதன் போது பூசையில் கலந்து கொண்ட பொது மக்களின் திருக்கரங்களினால் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் பண்ணி வழிபடும் பாக்கியம் கிடைக்கப்பெற்றதுடன், ராமகிருஸ்ண மிஷன் இல்ல மாணவர்களினால் சிவ நடனம் நிகழ்த்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.