புத்தல - கதிர்காமம் வீதியில் வெளிநாட்டு பெண் ஒருவர் வீதியில் இருந்த காட்டு யானையை புகைப்படம் எடுக்க முயன்ற போது காட்டு யானை தாக்கி காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் கடந்த செவ்வாய்க்கிழமை (10) இடம்பெற்றுள்ளது. ரஷ்யா நாட்டைச் சேர்ந்த 45 வயதுடைய பெண் ஒருவரே காயமடைந்துள்ளார்.
காயமடைந்த வெளிநாட்டு பெண் தனது 48 வயதுடைய கணவருடன் புத்தல - கதிர்காமம் வீதியில் முச்சக்கரவண்டியில் பயணித்துக்கொண்டிருந்த போது வீதியில் இருந்த காட்டு யானையை புகைப்படம் எடுக்க முயன்றுள்ளார்.
இதன்போது காட்டு யானை குறித்த வெளிநாட்டு பெண்ணை தாக்கியுள்ளது.
காட்டு யானையின் தாக்குதலில் காயமடைந்தவர் கதிர்காமம் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக அம்பாந்தோட்டை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.





