மனித உயிர்வாழ்விற்கும் வளர்ச்சிக்கும் அடித்தளமாக இருப்பதால் விவசாயம் முக்கியமானது.

 

 

 



மனித உயிர்வாழ்விற்கும் வளர்ச்சிக்கும் அடித்தளமாக இருப்பதால் விவசாயம் முக்கியமானது. இது நாம் தினமும் உண்ணும் உணவை வழங்குகிறது, சமூகங்கள் மற்றும் நாடுகளுக்கு உணவுப் பாதுகாப்பை உறுதி செய்கிறது. மக்களுக்கு உணவளிப்பதைத் தாண்டி, விவசாயம் ஒரு முக்கிய வாழ்வாதார ஆதாரமாகும், இது தொடர்புடைய தொழில்களில் மில்லியன் கணக்கான விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு வேலைகளை உருவாக்குகிறது. தொழில்களுக்கு மூலப்பொருட்களை வழங்குவதன் மூலமும், வர்த்தகம் மற்றும் ஏற்றுமதி மூலம் தேசிய வருமானத்திற்கு பங்களிப்பதன் மூலமும் இது பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. கூடுதலாக, நிலையான விவசாய நடைமுறைகள் மண்ணைப் பாதுகாக்கவும், தண்ணீரைச் சேமிக்கவும், பல்லுயிர் பெருக்கத்தை ஆதரிக்கவும் முடியும் என்பதால், விவசாயம் இயற்கை வளங்களை நிர்வகிக்க உதவுகிறது. ஒட்டுமொத்தமாக, விவசாயம் அவசியம், ஏனெனில் அது வாழ்க்கையை நிலைநிறுத்துகிறது, பொருளாதாரங்களை ஆதரிக்கிறது மற்றும் சுற்றுச்சூழல் சமநிலையை பராமரிக்க உதவுகிறது.

அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 65 % இற்கும் மேல் நேரடியாகவும் மறைமுகமாகவும்  விவசாய தொழிலை நம்பி வாழ்கின்றார்கள்.

அந்த வகையில் ஒரு வருடத்தில் அண்ணளவாக 445 கோடி பணப் புரள்வு உள்ள மிகவும் முக்கிய தொழிலான விவசாயத்தை முன்னேற்றுவதற்கு எடுக்கும் கரிசனை ஏனையவற்றுடன் ஒப்பிடுகையில் மன்னிக்கவும் மிகவும் குறைவு?

இந்த நிலையில் 
அபிவிருத்திக்காக பல கோடிகளை செலவு செய்பவர்கள் தயவுசெய்து காலநிலை மாற்றம் காரணத்தை அறிந்து அதற்கான தீர்வுகளை இனம் கண்டு வருடாந்தம் 
விவசாயிகள் தங்களது விவசாய நிலங்களில் விளைந்த நெல்லை உரிய முறையில் உலர்த்தி சேமிப்பதற்கு அல்லது அரசாங்கத்தின் நிர்ணய விலைக்கு விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதை சகலரும் அறிவர்

ஆகவே அரசியல் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகள் எதிர்காலத்தில் சகல நெல் சந்தைப்படுத்துதல் சபைக்குரிய களஞ்சிய சாலைகளிலும் எரிபொருள் செலவு  குறைந்த நடமாடும் நெல் உலர்த்திகளை அல்லது களஞ்சிய சாலைகளின் கூரைகளில் சூரியகலம் அமைத்து அதனை ஏனைய காலங்களில் மின்சார சபைக்கு  விற்பனை செய்து தேவை ஏற்படும் மழை காலங்களில் மின்சாரம் மூலம் நெல் உலர்த்தக் கூடிய உலர்த்திகளை அமைப்பதற்கு பல நவீன முறைகள் உள்ளன ஆகையால் மக்கள் பிரதிநிதிகள்,
திணைக்களத்தின் தலைவர் தயவுசெய்து சிந்தியுங்கள்.

 பிரதேச சபைகள் கூட இந்த திட்டத்தை ஒரு சேவையாகும் ஏன் வருமானமாகவும் செயல்படுத்த முடியும்   .