கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜெயந்தலால் ரத்னசேகர அவர்கள் முறக்கொட்டான்சேனை இராமகிருஷ்ணன் மிஷன் வித்தியாலயத்தின் புதிய கட்டிடத் தொகுதியை இன்று (10) திறந்து வைத்தார்.
முறக்கொட்டான்சேனை இராமகிருஷ்ணன் மிஷன் வித்தியாலய அதிபர் எம்.தவனேஸ்வரன் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் பிரதம அதிரியாக கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜெயந்தலால் ரத்னசேகர அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளை மேம்படுத்துவதற்கு தரம் 1 தொடக்கம் தரம் 5 வரையிலான மாணவர்களின் வகுப்பறைகள் வைபவ ரீதியாக திறந்து வைத்தார்.
"அறிவுக்கான புதிய பாதை திறக்கப்படுகிறது" என்ற தொனிப்பொருளில் மாணவர்களை மீண்டும் பாடசாலைக்குள் இணைத்துக்கொள்ளும் நிகழ்வு இடம்பெற்றது.
கடந்து 30 வருடங்களுக்கு மேலாக இராணுவத்தின் பாவனையில் இருந்த இவ் பாடசாலையினை தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளுக்காக வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே எஸ். அருள்ராஜ், கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் கே.குணநாதன், கல்குடா வலய கல்வி பணிப்பாளர் ரி.அனந்த ரூபன் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரின் இணைப்பு செயலாளர் க.திலிப்குமார் உட்பட கல்வி திணைக்கள உயர் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.



















