மட்டக்களப்பு மாவட்டத்தில், செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்துக்குட்பட்ட சித்தாண்டி பிரதேசத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்ததைத் தொடர்ந்து, விசேட டெங்கு கட்டுப்பாட்டு நிகழ்ச்சி திட்டம் ஒன்று இன்று (06.02.2026) செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சி, பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆர். முரளீஸ்வரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இதில், பிரதி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் க. மோகனகுமார், மாவட்டத்திற்குப் பொறுப்பான மலேரியா தடை இயக்க வைத்திய அதிகாரி மு. அச்சுதன், மாவட்டத்திற்குப் பொறுப்பான தொற்று நோயியல் வைத்திய அதிகாரி த. சரவணன், சுகாதார வைத்திய அதிகாரி ம. கீர்த்திகா, மாவட்டத்திற்குப் பொறுப்பான பொதுச் சுகாதார பரிசோதகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில், டெங்கு நோயின் பரவலை கட்டுப்படுத்துவதற்கான திட்டமிடல் நடவடிக்கைகள் மற்றும் மக்களிடையே மேற்கொள்ள வேண்டிய விழிப்புணர்வு நடவடிக்கைகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது. இதன் ஆரம்ப கட்டமாக, வைத்தியசாலைகள் மற்றும் வீடுகள் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டதுடன், டெங்கு பெருகக்கூடிய பல இடங்கள் கண்டறியப்பட்டன.
இந்த செயற்பாடுகளை முன்னெடுக்க, செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் பொதுச் சுகாதார பரிசோதகர்கள், மாவட்டத்திலுள்ள அனைத்து பொதுச் சுகாதார வெளிக்கள உத்தியோகத்தர்கள், தெளி கருவி இயக்குனர்கள் மற்றும் டெங்கு கட்டுப்பாட்டு உதவியாளர்கள் உள்ளிட்ட அனைவரும் முழுமையாக ஈடுபட்டனர்.

.jpeg)

.jpeg)

.jpeg)




