காரைதீவு ஆதிசிவன் ஆலயத்தில் இடம்பெற்ற சிவராத்திரி நிகழ்வில்
“சிவகானங்கள்” என்ற இசைத் தட்டு வெளியீட்டு நிகழ்வு நேற்று இரவு இடம்
பெற்றது.
காரைதீவைச் சேர்ந்த பழம்பெரும் இசைக் கலைஞர் விபுலமணி இளையதம்பி கோபாலசிங்கம் வெளியிட்ட 24 பாடல்கள் அடங்கிய சிவகானங்கள் இசைத் தட்டு வெளியீட்டு நிகழ்வு ஆயிரக்கணக்கான சிவபக்தர்கள் முன்னிலையில் வெளியிட்டு வைக்கப்பட்டது.
நூல் வெளியீட்டு நிகழ்வு கண்ணகை அம்மன் ஆலய தர்மகர்த்தா எஸ். நமசிவாயம் தலைமையில் இடம்பெற, அறிமுக உரையை ஓய்வு நிலை உதவிக் கல்விப் பணிப்பாளர் விபுலமாமணி விரி. சகாதேவராஜா நிகழ்த்தினார்.
அதைத் தொடர்ந்து பிரதேச சபைத் தவிசாளர் சு. பாஸ்கரன் முன்னிலையில் இசைத்தட்டு ஆலயத்தினரிடம் கையளிக்கப்பட்டது.
இசைத் தட்டை தயாரித்த இ. கோபாலசிங்கம் பொன்னாடை போர்த்தி கௌரிவிக்கப்பட்டார்.
சிவராத்திரி நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
வி.ரி. சகாதேவராஜா)






