ஏ.எல்.எம்.ஷினாஸ்
அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி பிரதேச செயலகத்தின் அலுவலக உத்தியோகத்தர்களுக்கான புதிய சீருடை அறிமுகம் செய்து வைக்கும் நிகழ்வு பிரதேச செயலாளர் திருமதி ராகுலநாயகி சஜிந்திரன் தலைமையில் கடந்த வாரம் நடைபெற்றது.
பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களை பொதுமக்கள் தினங்களில் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் மிக இலகுவாக அடையாளம் கண்டுகொள்ளும் விதமாக ஒவ்வொரு வருடமும் ஒரே நிறத்தில் சீருடை அணிந்திருப்பதை பல ஆண்டுகளாக முன்னெடுத்து வருகின்றனர். இந்த அடிப்படையில், 2026 ஆம் ஆண்டிற்கான புதிய சீருடை தற்போது அறிமுகம் செய்து வைத்துள்ளனர்.
பொதுமக்கள் தினத்தில் அனைத்து அலுவலக உத்தியோகத்தர்களும் ஒரே நிறத்திலான குறித்த சீருடையை அணிந்து வருகின்றமை பொதுமக்கள் தமது அலுவலக கடமைகளை இலகுவாக முன்னெடுப்பதற்கு பெரிதும் உதவிபுரிகின்றமை குறிப்பிடத்தக்கது.
அலுவலக உத்தியோகத்தர்களுக்கான புதிய சீருடையை அறிமுகம் செய்து வைக்கும் இந்த நிகழ்வில் பிரதேச செயலகத்தின் கணக்காளர் கே.றிஸ்வி யஹ்சர், பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் திருமதி திலகராணி கிருபைராசா, பிரதேச செயலகத்தின் நிருவாக உத்தியோகத்தர், சமுர்த்தி தலைமை பீட முகாமையாளர், கிராம சேவை உத்தியோகத்தர்களுக்கான நிருவாக உத்தியோகத்தர், திணைக்களங்களின் பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தர்கள், வெளிக்கள உத்தியோகத்தர்கள், பிரிவு ரீதியாக கடமையாற்றும் அலுவலக உத்தியோகத்தர்கள் என சகல உத்தியோகத்தர்களும் இதில் கலந்து கொண்டனர்.
ஏ.எல்.எம்.ஷினாஸ்





