"மாவட்டத்திலிருந்து தொழுநோயை முற்றாக ஒழிப்போம் " எனும் கருப்பொருளில்
காத்தான்குடி
நகரசபையும், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகமும் இணைந்து ஏற்பாடு செய்த
தொழுநோய் விழிப்புணர்வு பேரணி (05) வியாழக்கிழமை காத்தான்குடி நடைபெற்றது.
காத்தான்குடி
பிரதேச செயலக முன்றலில் துவங்கிய பேரணி பிரதான வீதி ஊடாக ஹிஸ்புழ்ழாஹ்
மண்டபம் வரை இடம்பெற்றது. இதில் தொழுநோய் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு
பதாதைகளை ஏந்தியபடி நூற்றுக்கு அதிகமான நேர்சிங் கல்லூரி மாணவர்கள் மற்றும்
மட்டக்களப்பு பிராந்திய தொழுநோய் தடுப்புப் பிரவு பொறுப்பதிகாரி வைத்தியர்
கே.லுபோஜிதா சுகாதார வைத்திய அதிகாரி யூ.எல். நஸீர்தீன் , நகரசபை செயலாளர்
திருமதி றினோஸா முப்லிஹ், பிரதேச செயலக நிருவாக உத்தியோகத்தர்
எம்.எஸ்.எம்.றஊப் உட்பட காத்தான்குடி சுகாதார சேவைகள் அலுவலக
உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், நகர சபை
உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
சமூகத்தில் தொழுநோய்
குறித்த பயத்தினை போக்கி ஆரம்பகட்டத்திலேயே தோல் மருத்துபவரை அனுகுவதான்
மூலம் முழுமையாக குணமடையலாம் என்று நம்பிக்கையை வலியுறுத்துவதே இந்த
பேரணியின் முக்கிய நோக்கமாக கருதப்படுகின்றது.
- எம்.ஏ.சீ.எம். ஜெலீஸ் -

.jpeg)

.jpeg)

.jpeg)

.jpeg)

.jpeg)
.jpeg)

.jpeg)
.jpeg)

.jpeg)

.jpeg)

.jpeg)
.jpeg)





