உலக ஈர நில தினத்தை முன்னிட்டு குருக்கள்மடம் ஏத்தாழைக்குள பறவைகள் சரணாலயத்தில் நிகழ்வு!!







 
 

BATTICALOA District Media Unit News

 
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட குருக்கள்மடம் ஏத்தாழைக்குள பறவைகள் சரணாலயத்தில் உலக சதுப்பு நில தினத்தை முன்னிட்டு ஈர நிலங்கள் மற்றும் பாரம்பரிய அறிவு கலாச்சார பாரம்பரியத்தை கொண்டாடும் வகையில், மத்திய சுற்றாடல் அதிகார சபையின் உதவிப்பணிப்பாளர் சுந்தரேசன் தலைமையில் இன்று (02) குருக்கள்மடம் ஐயனார் ஆலய வளாகத்தில் குறித்த நிகழ்வு நடைபெற்றது.
இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமான ஜே.எஸ் அருள்ராஜ் அவர்கள் கலந்து கொண்டதுடன், கௌரவ அதிதிகளாக மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை தவிசாளர் மே.வினோராஜ், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் உ.உதயஸ்ரீதர், பேராசிரியர் எஸ்.சிவரெட்ணம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதன் போது மலர் மாலை அணிவித்து அதிதிகள் வரவேற்கப்பட்டு, தேசியக்கொடி, சுற்றாடல் கொடி ஏற்றப்பட்டு, தேசிய கீதம், சுற்றாடல் கீதம் பாடப்பட்டதுடன், மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் நடப்பட்ட ஏத்தாழைக்குள பறவைகள் சரணாலய பெயர் பலகையும் திரைநீக்கம் செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வில் அதிகாரிகள், பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.