78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள் ஓட்டமாவடி பிரதேசத்தில் இடம்பெற்றது.
அல் சபா கிராமிய மீனவர் அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.
இராணுவத்தினர் ,கல்குடா ஜமாத்துல் உலமா சபை மற்றும் கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபை ஓட்டமாவடியின் வழிகாட்டலில் மூவ் கல்குடா டைவர்ஸ் அனர்த்த அவசர சேவை பிரிவு ,அகில இலங்கை ஜனாஸா அமைப்பு,ஐங் ஸ்டார், East mirror வலையமைப்பு என்பன இணைந்து இன்றைய சுதந்திர தினத்தை திறன் பட நடாத்தியிருந்தனர்.
இதன்போது மாணவர்களின் பாண்டு வாழ்த்திய இசையுடன் தேசியக் கொடிகளை ஏந்தியவாறு பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் இராணுவத்தினர் , இராணுவ உயர் அதிகாரிகள் ,போலீசார், அரச திணைக்களங்களின் உயர் அதிகாரிகள் என பலரும் ஊர்வலமாக விழா இடம்பெறும் இடத்திற்கு வருகை தந்து தேசிய கொடியினை ஏற்றியவுடன் தேசிய கீதம் இசைக்கப்பட்டு சர்வ மத குருமார்களின் ஆசிர்வாதத்துடன் நிகழ்வு யாவும் ஆரம்பிக்கப்பட்டது .
நிகழ்வில் அனர்த்த சேவைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கிய அகில இலங்கை ஜனாஸா அமைப்பு, அல் சபா கிராமிய மீனவர் அமைப்பு ,திடீர் மரண விசாரணை அதிகாரிகள், முதலுதவி பயிற்சியை முடித்துக் கொண்ட மாணவர்கள் மற்றும் சமூக சேவையாளர்கள் பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
நிகழ்வின் பிரதம அதிதியாக 23 ஆவது படைப்பிரிவின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் G.S.K.Perera, இலங்கை கடற்படை கட்டளை தளபதி M.G.A.Kumara, இலங்கை உயிர் காப்பு சேவை பிரிவின் தலைவர் Athula Senarathana, கல்குடா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி F.P .Dilanga, திட்டமிடல் பணிப்பாளர் M.M.Mubarak, ஜமாத்துல் உலமா சபை பொருளாளர் A.Iliyas ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
.jpeg)

.jpeg)



.jpeg)
.jpeg)

(1).jpeg)

.jpeg)





