இலங்கைத் திருநாட்டின் 78 ஆவது சுதந்திர தின நிகழ்வு மண்முனைப்பற்று
பிரதேச செயலக வளாகத்தில் புதன் கிழமை (2026.02.04) காலை 08.26 மணிக்கு
மண்முனைப்பற்று உதவி பிரதேச செயலாளர் திரு. கி. இளம்குமுதன் அவர்களின்
தலைமையில் ஆரம்பமானது.
இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளரினால்
தேசிய கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டதுடன் நாட்டின்
சுதந்திரத்திற்காக போராடி உயிர் நீர்த்தவர்களுக்காக இரு நிமிட மௌன
அஞ்சலியும் செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து உத்தியோகத்தர்களுக்கு
சுதந்திர தினம் பற்றியும் பொருளாதாரத்தால் வீழ்ச்சி அடைந்த நாட்டை
கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் பாதையில் பங்குதாரர்களாக விளங்கவேண்டியதன்
முக்கியத்துவம் தொடர்பாகவும் உதவி பிரதேச செயலாளரினால் உரை
நிகழ்த்தப்பட்டது. இந்நிகழ்வில் மண்முனைப்பற்று பிரதேச செயலக பிரதி
திட்டமிடல் பணிப்பாளர் திரு. A. சுதர்சன் அவர்களும், கணக்காளர்
திரு.A.மோகனகுமார் அவர்களும், நிருவாக உத்தியோகத்தர் திரு. V. தவேந்திரன்
அவர்கள் உள்ளிட்ட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இந்
நிகழ்வின் அடுத்த கட்டமாக பிரதேச செயலக வளாகத்தில் பிரதேச செயலக
உத்தியோகத்தர்களால் சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டதோடு மர நடுகையும்
இடம்பெற்றது.
இறுதியாக நிருவாக உத்தியோகத்தர் திரு. V. தவேந்திரன் அவர்களால் நன்றியுரை வழங்கப்பட்டு இனிதே நிறைவடைந்தது.
.jpeg)
.jpeg)

.jpeg)
.jpeg)

.jpeg)

.jpeg)

.jpeg)


.jpeg)

.jpeg)


.jpeg)













