5S முறைமை, உற்பத்தித்திறன் தொடர்பான நிகழ்வு மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிமனையில் இடம்பெற்றது.

 

 










5S முறைமை, உற்பத்தித்திறன் தொடர்பான நிகழ்வு மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிமனையின் Dr.சதுர்முகம் ஒன்றுகூடல் மண்டபத்தில் 17ம் திகதி மாசி மாதம் பிராந்திய சுகாதார பணிப்பாளர் Dr.R.முரளீஸ்வரன் அவர்களின் பணிப்புரைக்கமைய இடம்பெற்றது.இதில் அனைத்து பிராந்திய  வைத்தியசாலைகளிலிருந்தும்,சுகாதார வைத்திய நிலையங்களிலிருந்தும் சுகாதார உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.பிரதிப்பணிப்பாளர் Dr.K.மோகனக்குமார் அவர்கள் 5S முறைமை,அவை தொடர்பான நடைமுறை பிரச்சினைகளை எவ்வாறு கையாள்வது என்பது பற்றியும் எடுத்துக்கூறினார்.சுகாதார உதவியாளர்கள் தங்களது பொறுப்புகளையும், கடமைகளையும் அறிந்து வேலைகளை செய்யும்போது நோயாளர்களுக்கு திருப்தியான சேவையை எவ்வாறு வழங்கலாம் என்பது பற்றி நிர்வாக உத்தியோகத்தர் ரகுராஜா அவர்களால் கலந்துரையாடப்பட்டது.5S உடன் உற்பத்தி திறனை எவ்வாறு நடைமுறைப்படுத்தல்,புதிய ஆக்கபூர்வ சிந்தனைகள், செயற்பாடுகள் மூலம் தொடர் முன்னேற்ற பாதையில்(KAIZEN) வினைத்திறனுடன் செயற்படுதல் பற்றியும் தரம் மற்றும் பாதுகாப்பு பொறுப்பு வைத்திய அதிகாரி Dr.சகாய தர்ஷினி அவர்களால் கலந்துரையாடப்பட்டது.இந்நிகழ்வானது தரம் மற்றும் பாதுகாப்பு பிரிவினர் ஒருங்கிணைத்து நடத்தியமை குறிப்பிடத்தக்கது.