பிரதமரால் 21.78 மில்லியன் ரூபா நிதி பட்டிருப்பு தேசிய பாடசாலைக்கு ஒதுக்கீடு









 










கிழக்கு மாகாணத்திற்கு அண்மையில் விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமர், கல்வி அமைச்சர் ஹரணி அமர சூரிய மட்டக்களப்பு மாவட்ட தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபுவின் வேண்டுகோளுக்கமைய பட்டிருப்பு தேசியபாடசாலைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

இதன்போது பிரதமரிடம் அதிபர், பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பழைய மாணவர்கள், நலன்விரும்பிகள், சமூக செயற்பாட்டாளர்கள் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க கல்வி  அமைச்சினால் புதிய பாடசாலை கட்டிடம் அமைப்பதற்காக 21.17 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  இந் நிதியினை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்த பிரதமர், கல்வி அமைச்சர் ஹரணி அமர சூரிய மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு ஆகியோருக்கு பாடசாலை சமூகம் நன்றி தெரிவித்துள்ளது.

 

   என். செளவியதாசன்