மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒய்வு பெற்றுச் செல்லும் சமுர்த்தி
உத்தியோகத்தர்கள் மற்றும் சமுர்த்தி நலன்புரி சங்க உறுப்பினர்களின்
பல்கலைக் கழக அனுமதி பெற்ற மாணவர்களை பாராட்டும் நிகழ்வானது மட்டக்களப்பு
மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் எஸ். ராஜ்பாபு தலைமையில் காத்தான்குடி
ஹிஸ்புல்லா காலாசார மண்டபத்தில் இன்று (14) இடம் பெற்றது.
சமுர்த்தி
நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் இடம் பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் அவர்கள் பங்கு பற்றி
சிறப்பித்தார்.
இதன்போது மாவட்ட அரசாங்க அதிபரின் உரை, நினைவு
உரைகள் என்பன இடம்பெற்றதனைத் தொடர்ந்து குறித்த நிகழ்விற்கு அதிதிகளாக
அழைக்கப்பட்டிருந்த ஓய்வு பெற்ற மற்றும் இடமாற்றம் பெற்றுச் சென்ற
சிரேஸ்ட உயரதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்களுக்கு மாலை அணிவிக்கப்பட்டு,
நினைவுச்சின்னம் வழங்கப்பட்டதுடன், பணப்பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.
மேலும் மாவட்டத்தில் நீண்ட காலமாக சமுர்த்தி திணைக்களத்தில் அளப்பரிய சேவையாற்றிய உத்தியோகத்தர்களின் ஏற்புரையும் இடம் பெற்றன.
மேலும் சமுர்த்தி நலன்புரி சங்க உறுப்பினர்களின் பல்கலைக் கழக அனுமதி பெற்ற மாணவர்களை
அதிதிகள் வாழ்த்தி பாராட்டியமை குறிப்பிடத்தக்கதாகும்.










