இந்த வருடத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடுகளில் 09 பேர் உயிரிழந்துள்ளனர் .

 


இந்த வருடத்தில் கடந்த 45 நாட்களில் பாதாள உலக குற்றவாளிகளால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடுகளில் 09 பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.

தலங்கம, அக்குரேகொட பகுதியில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடிக்கு முன்னால் கடந்த 13 ஆம் திகதி நடந்த தம்பதியினரின் கொலை, இந்த வருடத்தின் முதல் இரட்டைக் கொலை என்று காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.