அதிநவீன சைபர் தாக்குதல்களைத் தடுக்க Whatsap-க்கு வலுவான பாதுகாப்பு கவசம் .

 

பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களை இலக்கு வைத்து நடத்தப்படும் அதிநவீன சைபர் தாக்குதல்களைத் தடுப்பதற்காக, “Strict Account Settings” எனும் புதிய உயர்தர பாதுகாப்பு அம்சத்தை மெட்டா (Meta) நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. 
 
அடுத்த சில வாரங்களில் பயன்பாட்டிற்கு வரவுள்ள இந்த அம்சம், பயனர்களுக்குக் கூடுதல் பாதுகாப்பை வழங்குகிறது. 
 
பயனர்கள் இந்த அம்சத்தை On செய்தவுடன், செயலி முழுவதும் பலத்த பாதுகாப்பு வளையத்திற்குள் வரும். 
 
முன்பின் தெரியாதவர்களிடமிருந்து வரும் கோப்புகள் (Attachments) மற்றும் மீடியாக்கள் தானாகவே தடுக்கப்படும். 
 
தெரியாத எண்களிலிருந்து வரும் அழைப்புகள் அமைதியாக்கப்படும் (Silencing calls). 
 
அத்துடன் ஊடுருவிகளால் தாக்குதல் நடத்த பயன்படுத்தப்படும் லிங்க் ப்ரிவியூ வசதி இந்த முறையில் செயலிழக்கச் செய்யப்படும். 
 
இணைய முகவரிகளின் மாதிரிக்காட்சிகள் (Link previews) முடக்கப்படும். 
 
இதன் மூலம் மால்வேர் (Malware) போன்ற தாக்குதல்கள் தடுக்கப்படும். 
 
இது Appleஇன் “Lockdown Mode” மற்றும் கூகுளின் “Advanced Protection Mode” ஆகியவற்றை ஒத்ததாக இருக்கும் என Whatsapp தெரிவித்துள்ளது. 
 
Whatsap நிறுவனத்தின் கருத்துப்படி, இந்த அம்சம் அரிய ஆனால் மிகவும் மேம்பட்ட கண்காணிப்பு அல்லது ஊடுருவும் முயற்சிகளை எதிர்கொள்ளும் ஒரு சிறிய குழுவினருக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. 
 
ஏற்கனவே அனைத்து தனிப்பட்ட செய்திகளும் End-to-End Encryption முறையில் பாதுகாக்கப்பட்டு வரும் நிலையில், இது ஒரு கூடுதல் கவசமாக இருக்கும்.