பிரதமரின் சுவிட்சர்லாந்திற்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் (UNDP) பிரதிநிதி அலெக்சாண்டர் டி குரூவை நேற்று (21) டாவோஸில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடாத்தனார்.
குறித்த கலந்துரையாடலின் போது, இலங்கைக்கும் – ஐக்கிய நாடுகளுக்கும் இடையிலான பலமான ஒத்துழைப்பிற்கும், வெள்ள நிவாரணம் மற்றும் வாழ்வாதார உதவிகளில் ஐக்கிய நாடுகள் சபை வழங்கிய ஆதரவிற்கும் பிரதமர் நன்றியைத் தெரிவித்தார்.
அத்தோடு, பாராளுமன்றத் தேர்தலில் மக்கள் வழங்கிய ஆணையின் அடிப்படையில், பொதுமக்களின் நம்பிக்கை, நல்லாட்சி மற்றும் நலிவடைந்த சமூகங்களுக்கான பலப்படுத்தப்பட்ட சமூகப் பாதுகாப்பு ஆகியவற்றின் ஊடாகத் தேசத்தைக் கட்டியெழுப்பி, மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.





