இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் (Qi Zhenhong), பாடசாலை சீருடைத் துணிகளைப் பிரதமர் ஹரிணி அமரசூரியவிடம் கையளித்தார்.

 


சீன அரசாங்கத்தினால் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட 2026ஆம் ஆண்டுக்கான பாடசாலை சீருடை துணிகளை உத்தியோகப்பூர்வமாகக் கையளிக்கும் நிகழ்வு  கொழும்பு துறைமுக வளாகத்தில் நடைபெற்றது. 
 
இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் (Qi Zhenhong), சீருடைத் துணிகளைப் பிரதமர் ஹரிணி அமரசூரியவிடம் கையளித்தார். 
 
இந்த திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள சுமார் 4,418,404 மாணவர்கள் 2026ஆம் ஆண்டுக்கான சீருடைத் துணிகளைப் பெற்றுக்கொள்ளத் தகுதி பெற்றுள்ளதாகக் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 
 
எதிர்வரும் ஜனவரி 19 முதல் நாடு முழுவதும் உள்ள வலயக் கல்வி அலுவலகங்களுக்கு இந்த சீருடைத் துணிகளை விநியோகிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.