ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி அனுசரனையின் பிரதேச செயலக பிரிவில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான வாழ்வாதார உபகரணங்கள், கனரக வாகன பயிற்சியில் கலந்து கொண்ட இளைஞர்களுக்கான NVQ 4 சான்றிதழ் வழங்கல் மற்றும் சமுதாய அடிப்படை அமைப்புகளால் முன்மொழியப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான கல்வி உபகரணங்கள், பிரதேச சமுதாய அடிப்படை அமைப்பினால் முதியோருக்கான சுகாதார மேன்பாடு வசதிகளுக்குரிய உபகரணங்கள் வழங்கும் நிகழ்வுகளானது ( நேற்றைய தினம் -2026/01/13) பிரதேச செயலக மாநாட்டு மண்பத்தில் பிரதேச செயலாளர் திரு.உ.உதயஸ்ரீதர் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின் கீழ் உதவி பிரதேச செயலாளர் திருமதி சத்யகௌரி தரணிதரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இதன் போது ஆசிய அபிவிருத்தி வங்கியினால் மாங்காடு, களுவாஞ்சிகுடி தெற்கு, எருவில் கிழக்கு, மகிழுர் கிழக்கு, ஓந்தாச்சிமடம் வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலுள்ள பயனாளிகளுக்கு சுயதொழிலுக்கான உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திரு.எஸ்.பிரபாகரன், தலைமையக முகாமையாளர் திருமதி புவனேஸ்வரி ஜீவகுமார், முகாமைத்துவ பணிப்பாளர் திரு.கே.உதயகுமார், கருத்திட்ட முகாமையாளர் திருமதி.விமலராணி யோகேந்திரன், மாங்காடு , எருவில், மற்றும் கல்லாறு சமுர்த்தி வங்கிகளின் முகாமையாளர்கள், மாவட்ட சமூக அபிவிருத்தி உதவியாளர் திரு.எம்.உதயகுமார், மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.கே.ரவீந்திரன், சமூக அபிவிருத்தி உதவியாளர் திரு.தெ.உதயசுதன், சமுதாய அடிப்படை அமைப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.பி.ஜசோபனா,சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பிரதேச சமுதாய அடிப்படை அமைப்பு தலைவர், அலுவலக உத்தியோகத்தர்கள், சமுதாய அடிப்படை அமைப்பு உறுப்பினர்கள், மாணவர்கள், பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
.jpeg)
.jpeg)

.jpeg)
.jpeg)

.jpeg)
.jpeg)

.jpeg)
.jpeg)
.jpeg)

.jpeg)

.jpeg)
.jpeg)

.jpeg)
.jpeg)






