வளமான நாடு அழகான வாழ்க்கை "CLEAN SRI LANKA" கிராமம் தோறும்
விசேட
மக்கள் நலன்புரி வேலைத்திட்டத்தின் அங்கமாக மட்டக்களப்பு மண்முனை வடக்கு
பிரதேச செயலகத்தினால் "CLEAN SRI LANKA" நடமாடும் வேலைத்திட்டம்
முன்னெடுக்கப்பட்டது .
மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திருமதி
சிவப்பிரியா வில்வரத்னம் அவர்களின் நெறிப்படுத்துதலில் "CLEAN SRI LANKA"
நடமாடும் வேலைத்திட்டமானது மட்டக்களப்பு / கல்லடி முகத்துவாரம் விபுலானந்தா
வித்தியாலயத்தில் நடைபெற்றது.
ஆரம்ப நிகழ்வாக மங்கல
விளக்கேற்றலுடனும் உத்தியோகபூர்வமாக பிரதேச செயலகம் உத்தியோகபூர்வமாக
மக்கள் சேவைகளை மு.ப8.00 மணிக்கு ஆரம்பித்து வைத்தது.
உதவிப்
பிரதேச செயலாளர்கள் திருமதி லக்ஷன்யா பிரசாந்தன், சுபா சதாகரன், பிரதி
திட்டமிடல் பணிப்பாளர், நிர்வாக கிராம உத்தியோகத்தர், சமுர்த்தி தலைமையக
முகாமையாளர் மற்றும் அனைத்து உத்தியோகத்தர்களும் தமது சேவைகளை
வழங்கியிருந்தனர்.
மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தினால்
நடாத்தப்பட்ட "CLEAN SRILANKA" நடமாடும் வேலைத்திட்டத்தில் மொத்தமாக 1076
பயனாளிகள் வருகை தந்ததுடன் அவற்றில் 1070 பயனாளிகளுக்குரிய சேவைகள்
முடிவுறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மண்முனை வடக்கு பிரதேச
செயலகத்தினால் நடாத்தப்பட்ட "CLEAN SRI LANKA" நடமாடும் வேலைத்திட்டத்தில்
சேவையை பெறும் நோக்குடன் பெருந்திரளான பொது மக்கள் ஆர்வத்துடன்
கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.


























































