விநாயகர் மீன்பிடி சங்க மாணவர்களுக்கு ஒஸ்கார் கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு.

 













 அவுஸ்திரேலிய காரைதீவு மக்கள் ஒன்றியம்( ஒஸ்கார்) , காரைதீவு விநாயகர் மீன்பிடி கூட்டுறவுச்சங்க உறுப்பினர்களின் பிள்ளைகளுக்கு  கற்றல் உபகரணங்களை நேற்று  (04)   ஞாயிற்றுக்கிழமை மாலை வழங்கி வைத்தது.

இந்நிகழ்வு,  சங்கத் தலைவர் எஸ்.துரைரத்னம் தலைமையில்,  சங்கச் செயலாளர் ஆர்.சுஜிதன் ஒழுங்கமைப்பில், காரைதீவு வீரபத்திரர் சுவாமி ஆலய அறநெறி பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது .

ஒஸ்காரின் சிரேஸ்ட உறுப்பினர் ஆர்.பிரதீபராஜ் அங்கிருந்து இந்த செயற்றிட்டத்திற்கு இணைப்பாளராக செயற்பட்டார்.

ஒஸ்கார்  தலைவர் கந்தசாமி பத்மநாதன் ஒழங்கமைப்பில்,  சிரேஸ்ட உறுப்பினர்களான ஆர்.பிரதீபராஜ் மற்றும் அ.மகேந்திரன் ஆகியோர் இத் திட்டத்திற்கு நிதி அனுசரணை வழங்கியிருந்தனர்.

ஒஸ்கார் அமைப்பின் வேண்டுகோளுக்கு இணங்க,  ஓய்வு நிலை உதவிக் கல்விப்பணிப்பாளர் வி.ரி. சகாதேவராஜா கலந்து சிறப்பித்தார்.

கூடவே  ஆசிரியர்களான ஆர்.இரத்தினகுமார்,  கே.லோகநாதன் ஆகியோரும் சமூகமளித்திருந்தனர்.

அவர்கள் 17 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை  வழங்கி வைத்தனர்.

நிகழ்வில் சங்க பிரதிநிதிகள் மாணவர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
 
 
( வி.ரி.சகாதேவராஜா)