கொழும்பின் புறநகர் பகுதியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் தகாத செயற்பாட்டுக்கு பயன்படுத்திய விடுதியை பேலியகொட பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர்.
பேலியகொட பொலிஸ் பிரிவின் பண்டோலான சந்தி பகுதியில் இயங்கி வந்த விடுதி நேற்று முன்தினம் பிற்பகல் சுற்றிவளைக்கப்பட்டு மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த விடுதி முகாமையாளராக பணியாற்றிய பெண்ணும், தகாத செயற்பாட்டில் ஈடுபட்ட இரண்டு பெண்களும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் வத்தளை, கஸ்எல்ல மற்றும் பகவந்தலாவ பிரதேசங்களை சேர்ந்த 21, 36 மற்றும் 47 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
.jpg)




